மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் பதிவேடுகளில் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் ஆர்.டி.ஐ. மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்திடம், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அதில், கடந்த 2022 -ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை சிகிச்சை பெற்ற ஆண், பெண் மற்றும் திருநங்கைகளின் விபரங்கள், சிகிச்சையின்போது இறந்தவர்கள் விவரங்கள் ஆகியவற்றை கேட்டிருந்தார்.
இது குறித்த எந்த விபரங்களும் மருத்துவ பதிவேட்டில் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.