தவெக தலைவர் விஜய் பனையூரை விட்டு வெளியே வந்து மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை கே.கே.நகரில் செய்தியாளர்களிடம் பேசி அவர்,
பட்ஜெட்டில் தமிழகம் இடம்பெறவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது என்றும், 12 லட்சம் சம்பளத்துக்கு வரி விலக்கு தமிழர்களுக்கு பொருந்தாதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் பனையூரை விட்டு வெளியே வந்து மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
பத்திரிகையாளர்களின் செல்போன் பறிமுதல் மிக மிக கண்டனத்துக்குரியது என்றும், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அந்த மாசுபட்டவர் யார் என இதுவரை தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.