டெல்லியின் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களை அரவிந்த் கெஜ்ரிவால் பொய் சொல்லி ஏமாற்றியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்
360 கிராமங்களைச் சேர்ந்த ஒரு குழுவை தாம் சந்தித்ததாகவும், அவர்களிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளிட்டவற்றை செய்வதாக கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியால் பாதிக்கப்பட்ட இந்த 360 கிராமங்களை சேர்ந்த மக்களின் பிரச்னைகளை பிரதமர் மோடியால் மட்டுமே தீர்க்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.