வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
வக்பு வாரிய திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வக்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
ஜெகதாம்பிகா பால் தலைமையிலான குழு, மசோதாவில் கொண்டுவரப்பட்ட 14 திருத்தங்களை வாக்கெடுப்பு அடிப்படையில் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, இறுதி வரைவு மசோதா மீது கடந்த 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதல் பெறப்பட்டது.
தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிா்லாவிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்நிலையில், கூட்டுக் குழுவின் தலைவா் ஜெகதாம்பிகா பால், வக்பு சட்டத்திருத்த மசோதா அறிக்கையை மக்களவையில் இன்று தாக்கல் செய்வார் என மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.