அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பத்திரிகையாளர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்படுவதன் அவசியம் என்ன என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், FIR லீக் ஆனது முழுக்க முழுக்க திமுக அரசின் தவறு என்று குற்றம்சாட்டியுள்ளார்.
சிறப்பு புலனாய்வு குழு பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்ததன் அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ள அவர், வழக்கை பத்திரிகையாளர்கள் பக்கம் திசை திருப்புவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் என்பதால் ஸ்டாலின் மாடல் அரசு இவ்வழக்கில் ஏதேனும் அழுத்தம் தருகிறதோ என சந்தேகம் எழுவதாக இபிஎஸ் கூறியுள்ளார்.
யார் அந்த SIR என்பதை கண்டறிய இந்த வழக்கை உடனடியாக CBI-க்கு மாற்ற வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.