ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வாளால் வெட்டிவிட்டு, ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த நபரின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ராகுலுக்கும், சந்தியா சதீஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த சந்தியா சதீஷை, ராகுல் வாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சந்தியா சதீஷை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது தடுத்து நிறுத்திய ராகுல், சந்தியா சதீஷின் அருகில் வாளுடன் சுற்றித்திரிந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.