கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தெரு விளக்குகளை சீரமைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தீப்பந்தம் ஏற்றியும், ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்பன் நகர் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் பல மாதங்களாக பழுதடைந்து உள்ளதால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கம்பன் நகர் பகுதி மக்கள், வீட்டிற்கு முன்பு தீப்பந்தங்களை ஏற்றியும், ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.