திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசாத் தெருவை சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கிலாபத் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தில் பாபா பக்ருதீன், உறுப்பினராக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் தொடர்ந்து கிலாபத் அமைப்போடு தொடர்பில் உள்ளாரா என்ற சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
என்.ஐ.ஏ சோதனையையொட்டி அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.