சென்னை அடுத்த தாம்பரத்தில் லீஸ் பணத்தை திரும்பி தர தாமதம் ஆனதால் இடைத்தரகரை திமுகவை சேர்ந்த எம்எல்ஏ ராஜா அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்திருக்கிறது.
தாம்பரத்தை சேர்ந்த ஹரி என்பவருக்கு இடைத்தரகரான மாரிமுத்து லீஸ் முறையில் வீடு பார்த்து கொடுத்துள்ளார். அதற்காக மாரிமுத்து 8 லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹரி வேறு வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.
அப்போது ஒன்றரை லட்சம் ரூபாயை கொடுத்த மாரிமுத்து, மீதி பணத்தை திரும்ப கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹரி, இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஐசக்-இடம் கூறியுள்ளார். இதையடுத்து மாரிமுத்துவின் வீட்டுக்கு சென்ற திமுகவினர், பேச்சுவார்த்தை நடத்த எம்.எல்.ஏ. ராஜா அழைப்பதாக கூறி மாரிமுத்துவை அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பீர்க்கன்காரணை காவல் நிலையத்துக்கு சகோதரி மற்றும் இரு மகள்களுடன் வந்த மாரிமுத்து, சம்மந்தப்பட்ட எல்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தார். மேலும், உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாகவும் வேதனை தெரிவித்தனர்.