கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் குலதெய்வ கோயிலுக்கு சரக்கு வாகனமொன்றில் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ராமநத்தம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதில் மரிக்கொழுந்து என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 15 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.