மனிதனை விண்ணுக்கு அனுப்பி, வெற்றிகரமாக திரும்ப அழைத்து வரும் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள முனைவர் நாராயணனுக்கு அவரது சொந்த ஊரான நாகர்கோவில் அடுத்த மேலகாட்டு விளையில் பாராட்டு விழா நடைபெற்றது.
மேள தாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்து கிராம மக்கள் அவரை வரவேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தின் பணிகள் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், கன்னியாகுமரியில் விண்வெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கூறினார்.