அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற விமானத்தின் இறக்கையில் தீ பற்றியது.
டெக்சாஸ் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஜார்ஜ் புஷ் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து நியூயார்க் செல்வதற்காக 104 பயணிகள், 5 பணியாளர்கள் என மொத்தம் 109 பேருடன் விமானம் ஒன்று புறப்பட்டு ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, விமானத்தின் இறக்கைகளின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட விமானி, விமானத்தை சாமர்த்தியமாக நிறுத்தினார். பிறகு, தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.