ஏடிஜிபி கல்பனா நாயக்-ஐ கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஏடிஜிபி கல்பனா நாயக்-இன் அலுவலகம் தீக்கிரையான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
போலீஸ் ஆட்சேர்ப்பில் முறைகேடு நடப்பதாக ஏடிஜிபியே கூறுவது ஐயத்தை அதிகரித்திருக்கிறது என தெரிவித்துள்ள ராமதாஸ், ஏடிஜிபி புகாரளித்து 6 மாதங்கள் கடந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
ஏடிஜிபி-யின் குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என தெரிவித்துள்ள ராமதாஸ், பெண் ஏடிஜிபியை கொலை செய்ய திட்டமிட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.