ராமநாதபுரத்தில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் நூலிழையில் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
புதுமடம் விலக்கு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர், திடீரென தனது வாகனத்தை திருப்பினார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதிய நிலையில், நிலைதடுமாறி அந்த நபர் கீழே விழுந்தார்.
இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்து பேருந்தினை நிறுத்தினார். இதனால் இருசக்கர வாகன ஓட்டி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.