தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பேருந்து நடத்துனரை கத்திரிக்கோலால் குத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
தென்காசியில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசுப் பேருந்தில் மதுபோதையில் பயணித்த சிறுவனை நடத்துனர் நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், மீண்டும் பேருந்து அதே வழியில் வரும் என நினைத்து நீண்ட நேரமாக காத்திருந்துள்ளார்.
அப்போது வேறு ஒரு அரசுப் பேருந்து அவ்வழியாக பயணித்த நிலையில், தன்னை இறக்கிவிட்ட நடத்துனர் இவர்தான் என கருதி அவரை அந்த சிறுவன் கத்திரிக்கோலால் குத்தியுள்ளார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.