மத்திய அரசு வழங்கும் நிதியை முறையாக பயன்படுத்தாமல் மத்திய அரசு மீது திமுக பழி சுமத்துவதாக வி.கே.சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்துக்கு ஆதரவாளர்களுடன் வந்த வி.கே சசிகலா, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி நடத்தாமல் அனைத்து விவகாரங்களையும் அரசியலாகவே பார்ப்பதாக குற்றம் சாட்டினார். விஸ்வகர்மா திட்டத்தை குலத்தொழில் எனக்கூறி மக்களை திசைத்திருப்ப முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.