பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தில் இருவரை தேசிய புலனாய்வு முகமை குழுவினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 5 மணி நேரமாக நடந்த சோதனையில்pendrive உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பாபா பக்ருதீனை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
தொடர்ந்து ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக பாபா பக்ருதீன் மற்றும் கபீர் அகமது ஆகிய இருவரை தேசிய புலனாய்வு முகமை குழுவினர் கைது செய்தனர்.