காவலர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடக்கிறது என்ற ஏடிஜிபி கல்பனா நாயக்-இன் குற்றச்சாட்டு உண்மையில்லை என சீருடைபணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.
காவல்துறை பணி நியமனங்களின்போது முறைகேடு நடப்பதாக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த முறைகேட்டை வெளிக்கொண்டு வந்த பின் தனது அலுவலகம் தீக்கிரையானது எனவும் ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சீருடை பணியாளர் தேர்வாணையம், கல்பனா நாயக்-இன் குற்றச்சாட்டு உண்மையில்லை என தெரிவித்துள்ளது.
மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி அக்டோபர் 3ம் தேதிதான் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது என்று சீருடை பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.