ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 48 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நிலுவைத்தொகையை மாணவர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாக கல்விக்கடன் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.