டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரமும் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தொடர்ந்து 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு தீவிரமாக நடைபெற்ற நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.
ஆர்.கே.புரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஸ்ரீ அனில் சர்மாவை ஆதரித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டடார்.
இந்நிலையில் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளிலும், எல்லைப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.