மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்து வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை தடுக்கவும், மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், மெக்சிகோவின் வடக்கு எல்லையில் அமெரிக்காவை ஒட்டிய பகுதிகளில் 10 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் உத்தரவாதம் அளித்தார்.
இதனை தொடர்ந்து மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்து வைப்பதாக அறிவித்துள்ள அமெரிக்கா, இந்த உத்தரவு ஒரு மாதம் அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.