கும்பகோணம் ரயில் நிலையத்தில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அகில பாரதிய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்த ஆனந்தா வலியுறுத்தியுள்ளார்.
கும்பகோணத்தில் நடைபெறவுள்ள மாசிமக பெருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அகில பாரதிய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்த ஆனந்தா, மாசிமக பெருவிழாவிற்கு ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், கும்பகோணம் ரயில் நிலைய சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மாசிமக பெருவிழாவிற்கு தேவையான முன்னேற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.