சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஜிபிஎஸ் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவூர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரின் மகன் மைத்தீஸ்வரன், அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிறுவனுக்கு கடந்த ஜனவரி 22 ந் தேதி நடக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
இரண்டு கால்களும் செயலிழந்ததால், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்தவர்கள் பரிசோதனை செய்ததில், நரம்பு மண்டலத்தை முடக்கி உயிர் குடிக்கும் ஜி.பி.எஸ் நோய் தொற்று பரவி உள்ளதை கண்டறிந்தனர்.
இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மாநிலத்தை தொடர்ந்து தமிழகத்தில் முதல் முறையாக ஜி.பி.எஸ் தொற்றால் சிறுவன் உயிரிழந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.