ஏடிஜிபி கல்பனா நாயக் தன்மீது கொலை முயற்சி நடந்ததாக புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
ஜூலை 29, 2024…. மாலை சுமார் 5 மணி இருக்கும்… சென்னை எக்மோர்ல இருக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அலுவலகத்துல உள்ள ஏடிஜிபி கல்பனா நாயக் ரூம்ல மள மளனு தீப்பிடிச்சு எரியுது.
அந்த விபத்துல ரூம்ல இருந்த முக்கியமான ஆவணங்கள் எல்லாம் கருகிப்போயிருச்சுனு எக்மோர் போலிஸ் ஸ்டேசன்ல கம்ப்ளண்ட் ஒன்னு பதிவாகுது. முதற்கட்ட விசாரணையில ஏசியிலிருந்து கசிஞ்ச மின்கசிவால தான் விபத்து நடந்துருக்க வாய்ப்புனு சொல்லப்பட்டுச்சு.
அப்ப நடந்த சம்பவம் தமிழக அரசியல்ல மறுபடியும் இப்ப மிகப்பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தியிருக்கு. கல்பனா நாயக் யாரு ? அவங்க ரூம்பல எப்படி தீ பிடிச்சு எரிஞ்சது ? அவங்கள கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுச்சா ? இது மாதிரியான எல்லா கேள்விகளுக்கும் பதில தெரிஞ்சுக்க இந்த செய்தி தொகுப்ப முழுசா பாருங்க.
தமிழ்நாடு காவல்துறையில இருக்கிற பல்வேறு பதவிகளுக்கான ஆட்கள தேர்வு செய்ற பணிய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் செஞ்சுட்டு வருது. அந்த வகையில 2023 ஆம் வருசத்துல 321 சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான அறிவிப்ப வெளியிட்டு அதுக்கான தேர்வும் நடந்துச்சு.
ஆனா அந்த தேர்வுல இட ஒதுக்கீடு முறை சரியா கடைபிடிக்கலனு ஒரு புகார் எழுந்துச்சு. அது சம்பந்தமான வழக்க விசாரிச்ச நீதிமன்றம், இட ஒதுக்கீட்டுல நடந்த குளறுபடிகளை சரிசெய்யனும்னு உத்தரவும் போடுது. அதன் அடிப்படையில ஏற்கனவே முறைகேடா தேர்வான 41 பேரை நீக்கிட்டு புதுசா 41 பேர சேர்த்திருக்கதா தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் புது அறிவிப்பு ஒன்னு வெளியிட்டுச்சு.
புதுசா வெளியிட்ட அறிவிப்புலயும் குளறுபடி இருக்குறதா எழுந்த புகாரின் அடிப்படையில, மறுபடியும் புதுசா பட்டியல தயாரிச்சு தாக்கல் செய்யனும்னு நீதிமன்றம் உத்தரவு போட்டுச்சு. ஆனால் அந்த வழக்குல அதுக்கப்புறம் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லங்கிறது தனிக்கதை…
இதுக்கு இடைப்பட்ட காலத்துல சப் இன்ஸ்பெக்டர் உட்பட போலிஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்க பல பதவிக்கான நியமனங்கள்ல இட ஒதுக்கீட பின்பற்றுறதுல நடந்த முறைகேடுகள பத்தி விரிவா விசாரிக்கத் தொடங்குறாங்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தோட ஏடிஜிபியா இருந்த கல்பனா நாயக்.
பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு தயாரிச்ச புதிய பட்டியல போன வருசம் ஜூலை 29ம் தேதி சரிபார்க்க திட்டமிட்ட கல்பனா பட்னாயக், அதுக்காக தன்னோட ஆபிசுக்கு போயிட்டிருக்கும் போது தான் அவங்க ரூம்ல தீ பிடிச்சு எரியுற செய்தி வேகமாக பரவுது. அதாவது அவங்க ஆபிஸ்குள்ள போறதுக்கு ஒரு சில நிமிசங்களுக்கு முன்னாடி தான் அந்த தீ விபத்து சம்பவமும் நடந்துருக்கதாகவும் சொல்லப்படுது.
அப்போ நடத்துன விசாரணையில ஏசியிலிருந்து கசிஞ்ச மின்கசிவால தான் விபத்து நடந்ததா சொல்லப்பட்டுச்சு. இந்தநிலையிலதான், கல்பனா பட்நாயக் இப்ப அளிச்சுருக்க தகவல் மிகப்பெரிய பூகம்பத்தையே கிளப்பியிருக்கு.
போன வருசம் ஜூலை 29 ஆம் தேதி என்னோட ரூம்ல நடந்த தீ விபத்து தற்செயலா நடந்தது கிடையாதுனும், அது தன்னை கொல்ல தீட்டப்பட்ட சதித்திட்டமுன்னும் கல்பனா நாயக் பேசியிருக்க சம்பவம் காவல்துறை வட்டாரத்துக்குள்ள பரபரப்ப ஏற்படுத்தியிருக்கு.
தன்னோட ரூம்ல தீ விபத்து நடந்த அடுத்த நாளே, திருத்தப்பட்ட பட்டியல் தன்னோட ஒப்புதல் இல்லாமலேயே வெளியாச்சுனு சொல்லிருக்க கல்பனா நாயக், இந்த சதி சம்பவம் தொடர்பா விரிவான விசாரணை நடத்தச் சொல்லி டிஜிபிக்கு லெட்டர் எழுதி ஆறு மாசமா எந்த நடவடிக்கையும் எடுக்கலனும் சொல்லி வேதனை பட்டுருக்காங்க.
போலீஸ் டிபார்ட்மெண்ட்ல பணி நியமனத்துல நடந்த முறைகேடை வெளிக்கொண்டு வந்ததுக்காக காவல்துறையில உயர் பொறுப்புல இருக்க ஒரு அதிகாரியவே கொல்ல முயற்சி செஞ்சுருக்கதா கூறப்படுற இந்த சம்பவம் தமிழகம் முழுவதுமாகவே பேசுபொருளாகிட்டு வருகிறது.
மக்களை பாதுகாக்குற வேலையில இருக்க காவல்துறை அதிகாரிகளுக்கே இந்த நிலைனா மக்கள் எப்படி பாதுகாப்பா இருக்க முடியும்னு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை விட ஆரம்பிச்சுருக்காங்க. கல்பனா நாயக் தன்னை கொல்ல நடந்த சதித்திட்டம் தொடர்பாக அளிச்ச புகார்ல எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, இப்ப செய்தி வெளியான அப்புறம் மறுப்பு தெரிவிச்சு ஒரு விளக்கம் கொடுத்துருக்கு.
அதுல சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துல இயக்குனர் அலுவலகத்துல நடந்த தீ விபத்து சம்பவத்துல சதித்திட்டம் எதுவும் இல்லன்னும், அங்க இருந்த செப்பு கம்பிகள்ல ஷார்ட் சர்க்யூட் இருக்குறதுக்கான ஆதாரம் இருக்கும்னு விரிவான விளக்கத்த கொடுத்துருக்காங்க.
மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிற காவல்துறையில் நடந்திட்டு வர்ற இது போன்ற செயல்பாடுகள் அதன் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியிருக்கின்னே சொல்லலாம்.