நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர் செஸ் தொடரில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டாடா ஸ்டீல் செஸ் தொடரின் மாஸ்டர்ஸ் பிரிவில் உலக செஸ் சாம்பியன் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்நிலையில் சென்னை திரும்பிய அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, நடப்பு ஆண்டின் தொடக்கமே வெற்றியுடன் அமைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.தொடர்ந்து பிரக்ஞானந்தாவின் வெற்றி குறித்து அவரது சகோதரியும் கிராண்ட் மாஸ்டருமான வைஷாலி அளித்த பேட்டியில், கேண்டிடேட்ஸ் தொடர் மட்டுமன்றி, இனி வரும் அனைத்து தொடர்களுக்கும் இது முக்கியமான வெற்றியாக பார்க்கப்படும் என தெரிவித்தார்.
பிரக்ஞானந்தாவின் தாயார் நாகலட்சுமி அளித்த பேட்டியில், இறுதிப் போட்டியில் குகேஷ் உடன் பிரக்ஞானந்தா மோதுகிறார் என்பதே கடைசி நிமிடத்தில் தான் தெரிந்ததாக வியப்புடன் கூறினார்.