தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் கைதுக்கு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலைக்கு முருகனை தரிசித்து அறவழி போராட்டத்தில் பங்கேற்க மதுரைக்கு புறப்பட்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ஜி அவர்களையும், தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து இயக்க நிர்வாகிகளையும் கைது செய்து தடுப்புக்காவலில் சிறை வைப்பது தமிழக காவல்துறையின் அராஜக போக்கையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் காட்டுகிறது.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான PFI க்கு ஆதரவாக விசிக நடத்திய மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளித்து பாதுகாப்பு அளித்த தமிழக காவல்துறை..!! கோவையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 58 அப்பாவி ஹிந்துக்களை கொடூரமாக படுகொலை செய்த கொடிய பயங்கரவாதி நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளி அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து 2000 காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திய தமிழக காவல்துறை..!!
திருப்பரங்குன்றம் மலைக்கு அசைவ உணவை எடுத்துச் சென்று உண்பதற்கு அனுமதி அளித்து ஸ்ரீகந்தர்மலையின் புனிதத்தையும், ஹிந்துக்களின் சமய உணர்வையும் புண்படுத்திய முஸ்லீம் லீக் எம்.பி நவாஸ்கனிக்கு பாதுகாப்பு வழங்கிய தமிழக காவல்துறை..!!
திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம் என 1931 ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் மலை மீது சென்று வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி இந்து முன்னணி பேரியக்கத்தின் அறவழி போராட்டத்திற்கு அனுமதி மறுத்து பாஜக மற்றும் இந்து இயக்க நிர்வாகிகளை கைது செய்யும் தமிழக காவல்துறையின் அத்துமீறிய அராஜக போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த நிலை ஒருநாள் நிச்சயம் மாறும்!! ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்று தீரும்!! என எச். ராஜா தெரிவித்துள்ளார்.