திமுகவின் அரசியல் நாடகம் அம்பலப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை - எல்.முருகன்
Sep 13, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவின் அரசியல் நாடகம் அம்பலப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை – எல்.முருகன்

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 4, 2025, 12:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஜனநாயக ரீதியில் போராடுவதற்கான அனுமதி வழங்குவதுடன், இன்று கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் எல் .முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “தமிழ் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையானதாக போற்றப்படுகின்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை மையப்படுத்தி, இந்து விரோத அரசியலை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்ற ‘போலி திராவிட மாடல்’ திமுக அரசு, இந்து முன்னணி கட்சியின் மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வர சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் பாஜக தலைவர்களை கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக வணங்கப்படும் திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு சாப்பிட்டவர்களை தடுக்க திராணியற்ற இந்த திமுக அரசும், அதன் கைப்பாவையாக இயங்கி வருகின்ற ‘காவல் துறையும்’, இன்று இந்து அமைப்பினர் போராடுவதால் மதக் கலவரம் உருவாகிவிடும் என்று கூறி, தமிழகம் முழுவதும் உள்ள இந்து அமைப்பினரை கைது செய்து வருவது சர்வாதிகாரத்தின் உச்சம்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாள் கடைபிடிப்பதாக கூறி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பேரணி சென்றபோது ஏன் இந்தக் காவல்துறை தடுக்கவில்லை? அப்போது இந்த அடாவடித்தனமான கைது நடவடிக்கை மேற்கொள்ளாத காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும், திருப்பரங்குன்றத்திற்கு தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது எப்படி நியாயமாகும்?

கடந்த மாத இறுதியில்  உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றில், ஜனநாயக நாட்டில் மக்கள் போராட்டம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்றும், எந்தவொரு போராட்டத்திற்கும் அனுமதி இல்லை என்று கூறக்கூடாது என்றும்  நீதிபதிகளால் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அப்படியிருக்க, இன்றைய போராட்டத்திற்கு திமுக கைப்பாவையான காவல்துறை அனுமதி மறுத்துள்ளதுடன், அத்துமீறி அனைவரையும் கைது செய்து வருகிறது. மதக் கலவரம் உருவாக்குகின்ற நோக்கத்திலோ, தமிழகத்தில் உள்ள மற்ற மதத்தினருக்கு எதிரான நோக்கத்திலோ, இந்து அமைப்பினரால் இன்று போராட்டம் அறிவிக்கப்படவில்லை.

திருப்பரங்குன்றம் மலையின் புனிதம் கெடுகின்ற வகையில், நயவஞ்சக செயலில் ஈடுபட்ட குறிப்பிட்ட சமூக விரோதிகளை எதிர்த்து மட்டுமே இந்தப் போராட்டம் திட்டமிடப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே, சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை இழந்து விடக்கூடாது என்பதற்காக, நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் நாடகங்கள் அனைத்தும் அம்பலப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஜனநாயக ரீதியில் போராடுவதற்கான அனுமதி வழங்குவதுடன், இன்று கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று என எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: thiruparankundram murugan templeHigh Court guidelines.DMK governmentKadeshwara Subramanian
Share
Tweet
SendShare
Previous Post

சேலம் : கணவன் உயிருடன் இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவி கைது!

Next Post

காடேஸ்வரா சுப்ரமணியம் கைது : எச். ராஜா கடும் கண்டனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies