திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க வரும் ஹிந்துக்களுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மதுரையில் 3.02.2025 மற்றும் 4.02.2025 ஆகிய இரண்டு நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது உண்மையெனில்?,
திமுக நிறுவனர் அண்ணாதுரை அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்க பேரணியாக செல்ல திமுகவினருக்கு மட்டும் அனுமதி வழங்கியது எப்படி? திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலைக்கு இறைவன் முருகனை தரிசிக்க வரும் ஹிந்துக்களுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? என்று எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.