கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள கர்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சியில் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக, அஹல்யாபாய் ஹோல்கர், ஆண்டாள் நாச்சியார், வேலு நாச்சியார் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக கர்ம யோகினி சங்கமத்தின் தலைவர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுள் ஒன்றான சேவா பாரதி சார்பில் இந்த ஆண்டுக்கான கர்ம யோகினி சங்கமம், கன்னியாகுமரியில் வரும் மார்ச் 2-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100-வது ஆண்டு விழா, அஹல்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் விழா உள்ளிட்ட 4 முக்கிய தருணங்களை மையப்படுத்தி கர்ம யோகினி சங்கமம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய கர்ம யோகினி சங்கமத்தின் தலைவர் சுதா சேஷய்யன், பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களின் அசாத்திய திறமைகளை வெளிக்கொணர்வதுதான் கர்ம யோனினி சங்கமத்தின் நோக்கம் என தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கவுள்ளதாகவும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.