ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய வழக்கை ஐம்பதாயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, நாகேந்திரன் மனைவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணையின்போது இதே கோரிக்கையுடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வாதிட்டார்.
இரு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.