திருப்பரங்குன்றம் நோக்கி கையில் வேலுடன் புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைத்தனர்.
திருப்பரங்குன்றம் மலையில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி அசைவ உணவு உட்கொண்டதை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று இந்து அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.
இதையொட்டி, இந்து அமைப்புகளின் தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். மதுரை எல்லையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், காரைக்கால் பண்ணை வீட்டில் இருந்து வேலுடன் திருப்பரங்குன்றத்துக்கு புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை தடுத்து நிறுத்திய போலீஸார், அவரை வீட்டிலேயே காவலில் வைத்தனர்.