மதுரை பழங்காநத்தத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெறும் அறப்போராட்ட தான் பங்கேற்க உள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மகிழ்ச்சியான வெற்றி செய்தி..!! இந்து முன்னணி பேரியக்கத்தின் அறப்போராட்டத்திற்கு மாண்பமை நீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது.
மேலும் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள பாஜக மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்த அனைவரையும் விடுவிக்கவும் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இன்று மாலை 5.00 மணிக்கு மதுரை பழங்காநத்தத்தில் அறப்போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று மாலை சரியாக 5.00 மணிக்கு மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை காக்கும் அறப்போராட்டம் நடைபெறும். நான் காரைக்குடியில் இருந்து மதுரை பழங்காநத்தம் நோக்கி புறப்பட்டுவிட்டேன்.
முருக பக்தர்களும், தேச பக்தர்களும் சரியாக மாலை 4.30 மணிக்கு பழங்காநத்தம் வந்து சேருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கரம் கோர்ப்போம்! ஸ்ரீகந்தர் மலை காப்போம்!! சங்கமிப்போம்! சனாதன தர்மம் காப்போம்!! வெற்றி வேல்! வீரவேல்! !