சீனா தலைநகர் பெய்ஜிங்கில் வண்ண விளக்குடன் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
சீன சந்திர நாட்காட்டியின்படி, நிகழாண்டு புத்தாண்டு கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. வசந்தகால திருவிழா என்று வர்ணிக்கப்படும் சீன புத்தாண்டு, ஏறத்தாழ எட்டு நாட்களாக அந்நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள குன்மிங் டாகுவான் மைதானம் வண்ண விளக்குகளால் களைகட்டியது. பாரம்பரிய நடனத்துடன் ஒவ்வொரு நாளையும் புத்தாண்டை உற்சாகமாக சீன மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.