கேரளாவில் மனைவியை உருவ கேலிக்கு உள்ளாக்கி வரதட்சணை கொடுமைப்படுத்தி, தற்கொலைக்கு தூண்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
மலப்புரம் பகுதியை சேர்ந்த பிரவீன் – விஷ்ணுஜா தம்பதியருக்கு கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், பிரவீன் தனது மனைவி விஷ்ணுஜாவை தொடர்ந்து உருவ கேலி செய்து வந்ததாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த விஷ்ணுஜா, கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக விஷ்ணுஜாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மலப்புரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.