அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரண்டு மெக்ஸிகோ நாட்டினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், சட்டவிரோதமாக நாட்டில் குடியேறியவர்களை வெளியேற்ற போவதாக நிர்வாக உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
டொனால்ட் டிரம்பின் குடியேற்றக் கொள்கையைக் கண்டித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மெக்ஸிகோ நாட்டினர் தன்னெழுச்சியாக திரண்டு அந்நாட்டுக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர்தான் பாழ்பட்டுக் கிடந்த தேசத்தைக் சீர்படுத்தி கட்டமைத்தனர் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.