கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மீது, பெண் உதவியாளர் சாணத்தை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஏஓ தமிழரசி பணியில் இருந்தபோது, சங்கீதா என்பவர் அலுவலகத்தில் உள்ளே புகுந்து அவர் மீது தாக்குதல் நடத்தியதோடு, மாட்டு சாணத்தையும் வீசியுள்ளார்.
இதில், காயமடைந்த விஏஓ தமிழரசி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில், உதவியாளர் சங்கீதா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, சங்கீதா ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.