சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
ஆத்தூர் அருகேயுள்ள வளமாதேவி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில், அதையொட்டி பார் ஒன்று அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது. இந்த பாரில் கள்ளசாராய விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலையில், அதன் வீடியோ காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் ஜோதிவேல் , பாலு என இரண்டு திமுக பிரமுகர்களுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் நிலையில், மற்றொரு கள்ளக்குறிச்சி சம்பவம் அரங்கேறாமல் காவல்துறை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.