தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்ற பட்டணப்பிரவேச விழாவில், ஆதீனகர்த்தர் பூர்ணகும்ப மரியாதையுடன் ஆபரணங்கள் அணிந்துக்கொண்டு பல்லக்கில் வீதியுலா சென்றார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாவடுதுறை ஆதீனத்தில் குருபூஜை விழா மற்றும் பட்டிணப்பிரவேச விழா கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, நாள்தோறும் புத்தகங்கள் வெளியிடுவது, சிறந்த சமூக பணி ஆற்றுபவர்களுக்கு விருதுகள் வழங்குவது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆதீனகர்த்தரின் பட்டிணப்பிரவேச விழா நேற்றிரவு கோலாகலமாக நடந்தேறியது. இதில், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், கோமுக்தீஸ்வரர் கோயிலில் தரிசனம் மேற்கொண்டு சிறப்பு பூஜைகளை செய்தார்.
இதையடுத்து, தங்க மற்றும் வைர ஆபரணங்கள் அணிந்துகொண்டு, சிவிகை பல்லக்கில் வீதியுலா சென்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீபாராதனை எடுத்து வழிபட்டனர்.