திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் குளம் குப்பை கழிவுகளால் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பொன்னேரியில் உள்ள சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான குளத்தை இந்து சமய அறநிலைத்துறை முறையாக பராமரிக்கவில்லை எனவும், கோயில் குளத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றி நீராடும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.