நீலகிரியில் அதிகரித்துவரும் வனக்குற்றங்களை தடுக்கும் விதமாக பைக்காரா பகுதியில் வனத்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. நீலகிரியில் வனவிலங்குகளை வேட்டையாடுவது போன்ற குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
இதனை தடுக்கும் விதமாக மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமையிலான வனத்துறையினர் பைக்காரா பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.