அனைவருக்கும் அமைதி, ஞானம், நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை கங்கை மாதா அருளட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வது பாக்கியம் என தெரிவித்துள்ளார்.
சங்கமத்தில் நடைபெறும் ஸ்நானம் தெய்வீக தொடர்பின் ஒரு தருணம என்றும், அதில் பங்கேற்ற கோடிக்கணக்கானவர்களைப் போலவே, தானும் பக்தி உணர்வால் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அனைவருக்கும் அமைதி, ஞானம், நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை கங்கை மாதா அருளட்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்