முருக பக்தர்களை மிரட்டும் தொனியில் பேசுவதை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் ரகுபதி நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் சேகர்பாபு காவி உடை அணிந்து முருக பக்தர் என்று கூறினால் போதாது என தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலை முழுமையாக கோயிலுக்கு சொந்தம் என preview commisson தீர்ப்பில் உள்ளதாகவும், திருப்பரங்குன்றம் குறித்து பேசும் முன் அமைச்சர் சேகர்பாபு தீர்ப்பு விவரங்களை படிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முருக பக்தர்களை மிரட்டும் தொனியில் அமைச்சர் ரகுபதி பேசக்கூடாது என்றும் அண்ணாமலை ’தெரிவித்தார்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை அமைச்சர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.,