இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்ததைக் கண்டித்து, வெள்ளை மாளிகை முன் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலஸ்தீனத்தின் காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஏராளமானோர் கொலை செய்யப்பட்ட நிலையில், டிரம்ப், நெதன்யாகு சந்திப்பைக் கண்டித்து வெள்ளை மாளிகை முன் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாலஸ்தீனம் விற்பனைக்கு அல்ல என்றும், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விநியோகம் செய்வதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
மேலும், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் பிரதமர் இனப்படுகொலையை நிகழ்த்தியதாக குற்றம்சாட்டிய அவர்கள், இதனால் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை துயரப்படுவதை போல தத்ரூபமாக நடித்துக் காட்டினர். டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின், அமெரிக்காவுக்கு வந்த முதலாவது சர்வதேச தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது.