கிருஷ்ணகிரி அருகே 8-ம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
போச்சம்பள்ளி அடுத்த மகாதேவகொள்ள அள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படித்து வரும் 8-ம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அதிர்ச்சியடைந்த அவர்கள் உறவினர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியர் மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 3 ஆசிரியர்களையும் பணி இடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.