சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் தற்காலிக உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், நாடு முழுவதும் காலியாக உள்ள 32 சதவீதம் நீதிபதி பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்பாட்டத்தில், ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.