கன்னியாகுமரி மாவட்டம், பனச்சமூடு எனும் இடத்தில் கிணற்று நீரில் பெட்ரோல் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பனச்சமூடு எனும் இடத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த பெட்ரோல் பங்க்கில் இருந்து கசியும் பெட்ரோல், அப்பகுதியில் உள்ள கிணற்று நீரில் கலந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் பனச்சமூடு பகுதி மக்கள் குடிநீர் தேவைக்கு கிணற்று நீரை பயன்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால், அரசு குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.