ஆண்களுக்கான டி20 தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா 2ம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான டி20 தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த டி20 தொடரை 4 க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 855 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தொடர்கிறார்.
இந்தியாவின் அபிஷேக் சர்மா 829 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கும், திலக் வர்மா 803 புள்ளிகளுடம் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.