இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சாலையில் ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பெங்களூருவின் கன்னிங்ஹாம் சாலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து நின்று கொண்டிருந்த ராகுல் டிராவிட் பயணித்த கார் மீது சரக்கு ஆட்டோ ஒன்று மோதியது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய டிராவிட் ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது