மேற்குவங்கதேசத்தில் மாணவரை திருமணம் செய்த கல்லூரி பேராசிரியர் ராஜினாமா செய்தார்.
ஹரிங்கடா பகுதியில் அமைந்துள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றியவர் பயல் பானர்ஜி.
இவர் வகுப்பறைக்குள்ளேயே முதலாமாண்டு மாணவனை திருமணம் செய்த வீடியோ வெளியானது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் விசாரணைக் குழுவை அமைத்தது. இந்த நிலையில், கல்லூரி பேராசிரியர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.