இமாச்சலபிரதேசத்தில் பனிப்பொழிவால் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.
மணாலி, சிம்லா, ரோஹ்டாங் சோலாங், அடல் சுரங்கப் பாதை என அனைத்து இடங்களிலும் பனிபொழிந்து வருகிறது. இதனால் மலை, மரங்கள், வீடுகள் என பார்க்கும் இடமெல்லாம் பனி படர்ந்து ரம்மியமாக காணப்படுகிறது.
மேலும், பொதுமக்களும் பெரும்பாலானோர் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேலும், சாலைகளில் தேங்கி கிடக்கும் பனியை அகற்றும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.